துதித்திடுவோம் தூயவனை
துதிகனம் மகிமை செலுத்திடுவோம்
துதிகனம் மகிமை செலுத்திடுவோம்
1. அந்தகாரத்தின் ஆதிக்கம் விட்டு
ஆச்சரியமான ஒளியிலே சேர்த்தார்
சொந்தமான பரிசுத்தவான்களோடே
சுதந்திரம் தந்து சுவீகாரம் செய்தார்
ஆச்சரியமான ஒளியிலே சேர்த்தார்
சொந்தமான பரிசுத்தவான்களோடே
சுதந்திரம் தந்து சுவீகாரம் செய்தார்
2. நாவினால் துதிக்க நாதன் நம்வாயில்
நவமான கீதம் நலமுடன் தந்தார்
சாவிலிருந்து நம்மை
தூக்கி எடுத்தோனை
சதாகாலம் போற்றி வாழ்த்தி வணங்கி
நவமான கீதம் நலமுடன் தந்தார்
சாவிலிருந்து நம்மை
தூக்கி எடுத்தோனை
சதாகாலம் போற்றி வாழ்த்தி வணங்கி
3. இந்தநாள் வரையும் இயேசுதம் அன்பின்
இணையில்லாக் கிருபையால்
இறங்கியே காத்தார்
அந்தமில்லா அவர் அன்பதை எண்ணி
அனுதினம் அடிபணிந்தவரை
நாம் போற்றி
இணையில்லாக் கிருபையால்
இறங்கியே காத்தார்
அந்தமில்லா அவர் அன்பதை எண்ணி
அனுதினம் அடிபணிந்தவரை
நாம் போற்றி
4. தாழ்வினில் தயவாய் தாங்கி ஆதரித்து
தாழ்ந்திடாமல் தூக்கி தயாபரன் எடுத்தார்
வாழ்வினில் நமக்கு வல்லவர் செய்த
மாபெரும் நன்மைகள்
மறவாமல் நினைத்து
தாழ்ந்திடாமல் தூக்கி தயாபரன் எடுத்தார்
வாழ்வினில் நமக்கு வல்லவர் செய்த
மாபெரும் நன்மைகள்
மறவாமல் நினைத்து
5. கர்த்தாதி கர்த்தனும் இராஜாதி இராஜனும்
கனமகிமைக்குள்ள காருண்ய பூமானும்
நித்திய குமாரனாம் இயேசுவேதானே
நிதமவர் பாதத்தில் தாழ்ந்தே துதிப்போம்
HOME
More Songs